2021இல் வாசித்த நூல்கள்

ஆம். தலைப்பு சரி தான்.

டிசம்பர் 2021 இறுதியிலோ ஜனவரி 2022 முதல் வாரத்திலோ எழுதியிருக்க வேண்டிய பதிவு இது. முழுதாக ஓராண்டு தாமதமானது பணிச்சுமையால் என்றால் அது பொய். செயலூக்கம் இன்மையே முதன்மை காரணம். (இருந்தாலும் ஒரு வருஷம் ரொம்பத்தான் தாமதம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.) இப்போதாவது பகிர்ந்து கொள்ள முடிந்ததே என்பதே எனக்கு மகிழ்ச்சிதான்.

2021இல் நான் வாசித்த நூல்கள் குறித்த பதிவே இது.

மொத்தம் 84 நூல்கள் வாசித்திருக்கிறேன். 2020-
ஆம் ஆண்டை விட அதிகம் வாசிக்க வேண்டும் என்ற திட்பத்தோடுதான் 2021-ஆம் ஆண்டைத் தொடங்கினேன். என்றாலும் முதல் மாதத்திலேயே தனிப்பட்ட சில நிகழ்வுகளால் தொடர்ந்து வாசிப்பதற்கான நேரம் வாய்க்கவில்லை. அது சென்ற ஆண்டின் இறுதி வரை தொடர்ந்தது. மேலும் அந்நிகழ்வுகளால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். எனவே தீவிர படைப்புகளை வாசிக்க மனம் கூடவில்லை. சொல்லப்போனால் வாசித்து என்ன ஆகப்போகிறது என்ற மனநிலையில்தான் இருந்தேன். ஆனாலும் இசையும் வாசிப்பும் தவிர மீள்வதற்கு வேறு மார்க்கமும் தெரியவில்லை. அதனால் தீவிர நூல்கள் தவிர்த்து நேரத்தைக் கடத்தும் மிகச் சாதாரண நூல்களையே அதிகம் வாசித்தேன். நான் முன்னர் வாசித்தேயிராத ராஜேஷ்குமார், தேவிபாலா, இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோரின் நூல்களை வாசித்து நேரத்தைக் கடத்தினேன்.

எப்போதெல்லாம் வாசிப்பில் தொய்வு உண்டாகிறதோ அப்போதெல்லாம் சுஜாதாவை வாசிப்பேன். உடனே உற்சாகம் தொற்றி விடும். அந்த உற்சாகத்தை அணையாமல் கைக்கொண்டு தீவிர நூல்கள் வாசிக்கத் தொடங்கி விடுவேன். கடந்த ஆண்டும் சுஜாதாவின் நூல்களை அதிகம் வாசித்தேன்.

அபுனைவுகள் அதிகம் வாசிக்கவில்லை. என்றாலும் வாசித்த அபுனைவுகள் பெரும்பாலும் சிறந்த நூல்களே. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ச. ந. கண்ணனின் "ராஜ ராஜ சோழன்", கோபி ஷங்கரின் "மறைக்கப்பட்ட பக்கங்கள்", ஜெயமோகனின் "இந்திய ஞானம்" மற்றும் "உரையாடும் காந்தி", அம்பேத்கரின் "ஒரு விசாவுக்காக காத்திருக்கிறேன்", ஆர். பாலகிருஷ்ணனின் "இரண்டாம் சுற்று",
டாக்டர் சத்வாவின் "போலி அறிவியல்; மாற்று மருத்துவம்; மூடநம்பிக்கை" போன்றவற்றைச் சொல்லலாம். பாரதியாரின் மகளான சகுந்தலா பாரதி எழுதிய “என் தந்தை பாரதி” என்ற நூலும் மிக முக்கியமான ஒன்று. பாரதி பற்றிய புதியதோர் சித்திரத்தை முன்வைக்கும் நூல்.



புனைவை பொறுத்தவரை சென்ற ஆண்டு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று சொல்லலாம். தரமான நாவல்கள் என்று சொல்லத்தக்க சிலவற்றை மட்டுமே வாசித்திருக்கிறேன்.  புனைவுகளில் ஜெயமோகனின் "வெள்ளையானை" பெரும் பாதிப்பை ஏற்படுத்திய படைப்பு. அது தந்த பிரமிப்பும் தாக்கமும் பல நாட்களுக்கு நீடித்தது. கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்.
நான் "பரதேசி" படம் பார்த்ததில்லை. அப்படத்தின் மூலநூலான "எரியும் பனிக்காடு" வாங்கி 4 ஆண்டுகள் ஆகிய நிலையில் வாசித்தேன். ஆவணப் பதிவாக அப்படைப்பு மிக முக்கியமான ஒன்று. அதே போல் ஐந்து முறைக்கு மேல் தொடங்கி பாதியில் நிறுத்திய (ஏன் தொடர்ந்து வாசிக்கவில்லை என்று தெரியவில்லை; இத்தனைக்கும் அது மிகச்சிறிய நூல்தான்) சி.சு. செல்லப்பாவின் "வாடிவாசலை" சென்ற ஆண்டு முடித்தேன். Classic!



 

சினிமா சார்ந்த நூல்களும் சிலவுண்டு. யுகபாரதியின் "நேற்றைய காற்று (பாகம் 1 & 2) அவற்றில் முக்கியமானது. திரைப்பட பாடலாசிரியர்கள் 20 பேர் குறித்த கட்டுரைகள். அதிகம் கொண்டாடப்பட்டமக்களிடம் நன்கு அறிமுகமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கண்ணதாசன்வாலிவைரமுத்து ஆகியோர் குறித்து இந்நூல் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டே இரண்டு கவிதை நூல்களே வாசித்திருக்கிறேன். சென்ற ஆண்டு ஆங்கில நூல்களையும் பெரிதாக வாசிக்கவில்லை.

இனி பட்டியல்:

அரசியல்:

1.     நான் ஏன் பதவி விலகினேன்? – டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

2.     அம்பேத்கர்: பின்நவீனத்துவம் & இந்துத்துவம் மீரானந்தா & ரவிக்குமார்

3.     தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் ரவிக்குமார்

4.     FBI – என். சொக்கன்

5.     இந்தி தேசிய மொழியா? – சி. சரவணகார்த்திகேயன்

6.     அரசியல் பழகு சமஸ்

7.     அ-காலம் சாரு நிவேதிதா

8.     Caste as Social Capital – Prof. R. Vaidyanathan

நாவல்கள்:

9.     மிதவை – நாஞ்சில் நாடன்

10   1.  வெள்ளையானை – ஜெயமோகன்

11    2.  குகை – ஜெயமோகன்

12    3.  எரியும் பனிக்காடு – பி. ஹெச். டேனியல்

13.  அறுவடை – ஆர். சண்முகசுந்தரம்

14.  பந்தயப்புறா – பாலகுமாரன்

15.  மனம் உருகுதே – பாலகுமாரன்

16.  மெர்க்குரிப் பூக்கள் – பாலகுமாரன்

17.  தங்க முடிச்சு – சுஜாதா

18.  மண் மகன் – சுஜாதா

19.  ஜன்னல் மலர் – சுஜாதா

20.  இருள் வரும் நேரம் – சுஜாதா

21.  ஐந்தாவது அத்தியாயம் – சுஜாதா

22.  கை – சுஜாதா

23.  வேணியின் காதலன் – சுஜாதா

24.  நில்லுங்கள் ராஜாவே – சுஜாதா

25.  நில்! கவனி! தாக்கு! – சுஜாதா

26.  விரும்பிச் சொன்ன பொய்கள் – சுஜாதா

27.  தப்பித்தால் தப்பில்லை – சுஜாதா

28.  வாடிவாசல் – சி. சு. செல்லப்பா

29.  குமரிக்கோட்டம் – சி. என். அண்ணாதுரை

30.  உயிர்மெய் – அராத்து

31.  உயிர்மெய் 2 – அராத்துசூம்பி – அராத்து

32.  ஓப்பன் பண்ணா – அராத்து

33.  பெயல் – சைலபதி

34.  பெர்முடா – கேபிள் சங்கர்

35.  பச்சைக்குதிரை – புதியமாதவி

36.  நீ வானம்! நான் நீலம்! – ரேணுகா முத்துக்குமார்

37.  நள்ளிரவு செய்திகள்: வாசிப்பது துர்கா – ராஜேஷ் குமார்

38.  எவன் அவன் – ராஜேஷ்குமார்

39.  நில்லாமல் ஓடி வா – ராஜேஷ்குமார்

40.  அதே நிலா அதே கலா – ராஜேஷ்குமார்

41.  அது இது எது – ராஜேஷ்குமார்

42.  கொஞ்சும் வஞ்சனை – ராஜேஷ்குமார்

43.  சக்தி – இந்திரா சௌந்தரராஜன்

44.  ஆடு புலி ஆட்டம் – தேவிபாலா

45.  தொடாதே துரத்து – தமிழ்மகன்

46.  பொய்மான் கரடு – கல்கி

47.  One Arranged Marriage Murder – Chetan Bhagat

 

சினிமா

 

48.  நேற்றைய காற்று: பாகம் 1 – யுகபாரதி

49.  நேற்றைய காற்று: பாகம் 2 – யுகபாரதி

50.  தத்தகாரம் – யுகபாரதி

51.  OTT எனும் மாயவன் – கேபிள் சங்கர்

52.  தமிழ்ராக்கர்ஸ்: தோற்றமும் மறைவும் – ரிஷிகேஷ் ராகவேந்திரன்

சிறுகதை தொகுப்பு:

53.  மத்யமர் – சுஜாதா

54.  வேட்டி – கி. ராஜநாராயணன்

55.  கரிசல் கதைகள் – தொகுப்பு: கி. ராஜநாராயணன்

56.  பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் – ஜெயமோகன்

57.  தெர்மோகோல் தேவதைகள் – கேபிள் சங்கர்

58.  உடனிருப்பவன் – சுரேஷ் பிரதீப்

அறிவியல்:

59.  போலி அறிவியல்; மாற்று மருத்துவம்; மூடநம்பிக்கை – டாக்டர் சத்வா

60.  தண்ணீர் என்றோர் அமுதம் – சர். சி. வி. ராமன்

61.  கற்பனைக்கும் அப்பால் – சுஜாதா

62.  தலைமைச் செயலகம் (மீள் வாசிப்பு) – சுஜாதா

63.  ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2) – சுஜாதா

64.  மறைக்கப்பட்ட பக்கங்கள் – கோபி ஷங்கர்

கவிதை

65.  பரத்தை கூற்று – சி. சரவண கார்த்திகேயன்

66.  வீடும் வெளியும் – அனுக்ரஹா

கட்டுரை

67.  லீலை – கி. ராஜநாராயணன்

68.  சும்மாவா சொன்னாங்க பெரியவங்க? – பி. என். பரசுராமன்

69.  ஒருபால் உறவு: சில விவாதங்கள் – ஜெயமோகன்

70.  உரையாடும் காந்தி – ஜெயமோகன்

71.  IT துறையின் சொல்லப்படாத ரகசியங்கள் – வி. சந்திரசேகர்

72.  அல்குல் – கார்த்திக் புகழேந்தி

73.  Darknet: இருள் இணையத்தின் வரலாறு – வினோத் ஆறுமுகம்

வரலாறு & ஆவணப்பதிவுகள்

74.  நேதாஜி மர்ம மரணம் – ரமணன்

75.  இஸ்லாம்: ஓர் எளிய அறிமுகம் – பா ராகவன்

76.  என் தந்தை பாரதி – சகுந்தலா பாரதி

77.  ராஜ ராஜ சோழன் – ச. ந. கண்ணன்

78.  மகளிர் மட்டும் – பா. ராகவன்

79.  இரண்டாம் சுற்று – ஆர். பாலகிருஷ்ணன்

இந்திய மெய்யியல் & தத்துவம்

80.  இந்திய ஞானம் – ஜெயமோகன்

பிற

81.  +1 – என். சொக்கன்

82.  அன்பென்னும் ஆற்றல் – என். சொக்கன்

83.  வெற்றியைத் தரும் நுட்பங்கள் – என். சொக்கன்

84.  பாட்டிலே காந்தி கதை – அழ. வள்ளியப்பா

       2022இல் எவ்வளவு வாசித்தேன்

2021ஆம் ஆண்டுக்கான பதிவையே இப்போதுதான் எழுதுகிறானே, 2022இல் வாசித்த நூல்களை அடுத்த வருடம் தான் எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி தோன்றுகிறது அல்லவா? எனக்கும் அந்த கேள்வி இருந்தாலும் 2022 ஆம் ஆண்டு வாசித்த நூல்களையும் உடனே எழுதி பதிவேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். 2023 புத்தாண்டு தினத்தில் வெளியிடுவேன்.



 




 

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
2021 இல் நீ வாசித்த நூல்களின் தொகுப்பு மிகவும் அருமையாகவும் அதே சமயம் மிகவும் பிரமிப்பாகவும் உள்ளது. 2022 இல் வாசித்த நூல்களை விரைவில் பதிவிடவும் 🙏
- ச. அவினாஷ் ராஜ்