நேற்று ஒரு புத்தகம் படித்தேன். புத்தகத்தின் பெயரே வித்தியாசமானது.
"அ-சுரர்களின் அரசியல்". ஆசிரியர் ரவிக்குமார். 40 பக்கங்கள் மட்டுமே கொண்ட மிக எளிய நூல். ஆசிரியர் ஒரு கருத்தரங்கில் பேசிய உரைதான் இந்த நூல். அரை மணி நேரத்தில் படித்து விடலாம். ஆனால், படிக்கும்போதும் படித்த பின்பும் நம்மை சிந்திக்க வைக்கும் செய்திகளைக் கொண்டுள்ளது.
"அ-சுரர்களின் அரசியல்". ஆசிரியர் ரவிக்குமார். 40 பக்கங்கள் மட்டுமே கொண்ட மிக எளிய நூல். ஆசிரியர் ஒரு கருத்தரங்கில் பேசிய உரைதான் இந்த நூல். அரை மணி நேரத்தில் படித்து விடலாம். ஆனால், படிக்கும்போதும் படித்த பின்பும் நம்மை சிந்திக்க வைக்கும் செய்திகளைக் கொண்டுள்ளது.
ஆசிரியர் இந்நூலில் சொல்லும் சில முக்கியமான செய்திகள் இவை:
- சுரர் என்பவர் வைதீகர்கள். அ-சுரர் என்று புராணங்களில் கொடூரமாக சித்திரிக்கப்பட்டவர்கள் ஆதிகால பௌத்தர்கள்.
- இந்த அசுரர்கள் பஞ்சமா பாதகங்களான கொலை, களவு, பொய், கள் அருந்துதல், குரு நிந்தை ஆகியவற்றை செய்யாதவர்கள். அதை ஒதிக்கியவர்கள். அதற்கு எதிராக பிரச்சாரமும் செய்தவர்கள்.
- பிற்காலத்தில் நடந்த அரசியல் சூழ்ச்சியால் இவர்களை வர்ணக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி சூத்திரர்களாக ஒதிக்கிவிட்டனர் வைதிகர்கள். இந்த அசுரர்களே இன்றைய தலித்கள்.
தலித்களை வைத்து இன்று எவ்வாறு அரசியல் செய்யப்படுகிறது என்று ஆராய்கிறார் ஆசிரியர். நாமெல்லோரும் மது அருந்துவதைப் பற்றியும் புகைப் பிடிப்பதைப் பற்றியும் தான் அதிகம் பேசுகிறோம். கள் உண்ணுவதைப் பற்றி பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும், கள் உடலுக்கு நல்லது, அது ஆதிகாலத்திலிருந்து நம்மக்கள் பயன்படுத்திய இயல்பான ஒரு பானம் என்றுதான் பேசுகிறோம். இதை ஆசிரியர் முற்றிலும் மறுக்கிறார்.
கள்ளுக்கடை திறப்போம் என்று தமிழக அரசியல் கட்சிகள்(குறிப்பாக விஜயகாந்த்) கொடுக்கும் வாக்குறுதி மக்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை விளைவிக்கும் என்று சான்றுகளோடுச் சொல்கிறார். அது ஏழை மக்களின் பொருளாதாரத்தை எந்த வகையிலும் முன்னேற்றி விடாது என்றும் சொல்கிறார்.
சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார் ஆசிரியர்.
- கள்ளுக்கடைகள் ஏன் சேரிப் பகுதிகளில் மட்டும் அதிகம் இருக்கின்றன?
- கள்ளுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் யார்?
- தலித் தலைவர்கள் ஏன் கள்ளை எதிர்க்கின்றனர்?
- கள் போதை பொருள் இல்லையென்றால், அக்கால மக்களுக்கு உடல் வலுவைத் தந்திருந்தால் வள்ளுவர் ஏன் 2000 ஆண்டுகளுக்கு முன்பே "கள்ளுண்ணாமை"யை வலியுறுத்தி தனி அதிகாரம் படைத்துள்ளார்?
- கள்ளுக்கடைகளையும் கள் இறக்க பயன்படுத்தப்பட்ட தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்திய பெரியார் வாழ்ந்த தமிழகத்தில் மீண்டும் கள் வேண்டும் என்று பேசும் கட்சிகள் என்ன அரசியல் நோக்கம் கொண்டுள்ளன?
0 கருத்துகள்