அந்த எதிர்பாராதது, ஓர் அறிவிப்பு பலகை. பக்தர்களுக்கு.
"இந்துக்கள் மட்டும் உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள்" என்று நீல வண்ண பலகையில் வெள்ளை எழுத்துகளில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் எனக்கு அதிர்ச்சி. நண்பன் ராகவனை அழைத்துக் காண்பித்தேன். உடனே, புகைப்படம் எடுக்கச் சொல்லி இதைக் கண்டித்து எழுதச் சொன்னான். அப்போது எனக்குள் சில...அல்ல அல்ல...பல கேள்விகள் எழுந்தன. 2014ல் கூட இப்படி ஒரு அறிவிப்பா? இந்தியா உண்மையிலேயே மதச் சார்பற்ற நாடா? பெரியார் விதைத்த விதை கனி தராமல் போய்விட்டதா? இப்படியெல்லாம் நினைத்து குழம்பிக்கொண்டே படிகளில் இறங்கினேன்.
சில தூரத்தில் ஒரு பலகை இருந்தது. இதுவும் அறிவிப்பு பலகை தான். ஆனால், இது பக்தர்களுக்கானது அல்ல. கடவுளுக்கானது. பக்தர்கள் தங்கள் கடவுள் பழநி முருகன் தங்கள் ஆசையை நிறைவேற்றச் சொல்லி காகிதத் துண்டுகளில் எழுதி ஒட்டி வைத்திருந்த கரும்பலகை. அங்கே போதிய அளவு வெளிச்சம் இல்லை. எனவே, படிப்பதற்குச் சிரமமாக இருந்தது. புகைப்படம் எடுக்கவும் தான். வெறுமனே வேண்டிக்கொண்டால் தங்கள் கோரிக்கையைக் கடவுள் மறந்து விடுவார் போலும். அதனால்தான், தாளில் எழுதி நினைவூட்டுகின்றனர். சில விண்ணப்பங்கள் வேடிக்கையாக இருந்தன.

1. "நான் எக்ஸாம் ஸ்டேட் ஃபர்ஸ்ட் மார்க். முருகா என் அப்பா வருவாங்க"
2. "சந்தோஷ். ஐ லவ் யூ" (இடையில் கொஞ்சம் காகிதம் சுரண்டப்பட்டிருந்தது. எழுதியது ஆணாக இருக்க அதிக வாய்ப்புண்டு. சுரண்டப்பட்ட இடத்தில் பெண்ணின் பெயர் இருந்திருக்கலாம்)
3. எனக்கு எப்படியாவது ஒரு கார் வேணும்.
இவை மட்டும்தான் நான் புகைப்படம் எடுத்த வாசகங்கள். இன்னும் நிறைய என் கைபேசிக்குள் அகப்படாமல் போய்விட்டன.
இப்போது கொஞ்சம் சிந்திக்கலாம். வாட்ஸப், முகநூல், ஐ - வாட்ச் என்று தொழில்நுட்பம் நம் கைகளுக்குள் சுருங்கி வந்துவிட்ட 2015ல் ஒரு கோவிலில் 'இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்' என்று எழுதப்பட்டிருப்பது எதைக் காட்டுகிறது? நாம் வளர்ந்து விட்டோம் என்பதையா? அல்ல. இதில் மதத்தின் மிகப்பெரிய தந்திரம் இருக்கிறது. ஒரு காலத்தில் அறிவியலை மதம் வலுவாக எதிர்த்தது. விஞ்ஞானிகளை அது சாத்தான்களாக பாவித்தது. அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் உண்மையை தைரியமாகச் சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால், உண்மைதானே வெல்லும்? அறிவியல் வென்றது. மதங்களின் பெயரால் உருவாகியிருக்கும் பேதங்களை விஞ்ஞானம் அகற்ற முனைந்தது. இப்போது மதங்கள் கொஞ்சம் உஷாராகின. அறிவியலை எதிர்க்காமல் அறிவியலின் துணை கொண்டே தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவை முடிவெடுத்தன. அறிவியலை நன்கு பயன்படுத்திக்கொண்டன. மின் விளக்குகளால் கோவில் இரவிலும் பளிச் ஒளி பெற்றது. மைக் வைத்து மதவாதிகள் மந்திரம் ஓதினர். குறைந்த செலவில் சுவரில் மாட்டும் மின்சார மேளங்களையும் பயன்படுத்திக்கொண்டன. பூஜைகளையும் திருவிழாக்களையும் நேரடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பின. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவும் பயன்படுத்தும் அதே வேளையில் தன் நோக்கத்திலிருந்து இந்த மதங்கள் விலகவில்லை. பேதங்களை ஊக்குவிக்க இதே தொழில் நுட்பத்தை அவை பயன்படுத்துகின்றன. மக்களை மீடியா மூலம் பழைய அடிமை தனத்துக்கு அழைத்துச் செல்கின்றன. அதன் ஒரு சின்ன வெளிப்பாடுதான் இந்தப் பலகை. இதன் நீட்சிதான் தொலைகாட்சியில் சொல்லப்படும் ராசி பலன்கள், பெயர்ச்சிப் பலன்கள், சமயச் சொற்பொழிவுகள், புராணக் கதைகள்.
இந்த அறிவிப்பை எதிர்த்து யாரும் கேட்கவில்லையா? இதே அறிவிப்பு காஞ்சி காமாட்சியப்பன் கோவிலிலும் இருந்தது. நான் பார்த்தது பத்து ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. இருக்கும் இருக்கும். ஏன் இப்படி? உண்மையான காரணம், அதிகம் காசு பார்க்கும் கோவில்களில் இந்த அறிவிப்புப் பலகை உள்ளது. தஞ்சை பெரியக் கோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவில் போன்ற யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் கோவில்களில் இவ்வறிவிப்பு இல்லை. எனவே, இது காசு பார்க்கும் ஒரு வழியேயன்றி வேறில்லை. இந்துக்கள் மட்டும்தான் ஏமாந்து பணம் தருவர் போல. அதனால்தான், அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பழநி கோவில் செழிப்பாக இருக்கிறது.
ஒரு பக்கம் பக்தர்களாக மக்கள் மூடர்களாக...இன்னொரு பக்கம், வியாபாரிகளாக மதவாதிகள். இந்த முரண்பாடு களையப்படுவற்கு முன்னால் உலகமயமாக்கலின் விளைவைப் பற்றிப் பேசி பயனில்லை. இன்னொரு முறை யாராவது பழநியில் முருகன் ஆண்டியாய் இருக்கிறான் என்று சொல்லட்டும்....அப்புறம் இருக்கிறது.

- முற்றும்
0 கருத்துகள்