2020இல் வாசிப்பும் நானும்

            இந்த ஆண்டு தொடக்கத்தின் போது 365 நூல்களை வாசிக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டேன். ஆனால் மிக மிகக் குறைவாக வாசித்த ஆண்டாக இந்த ஆண்டு இருந்தது என்பதுதான் விநோதம். மொத்தம் வெறும் 87 நூல்கள் மட்டுமே வாசித்திருக்கிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு என் வாசிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு மேதகு ஐயா கொரோனா அவர்கள்தான் காரணம். பெருந்தொற்றுக் காலம் கிடைத்தற்கரிய நேரத்தை அனைவருக்கும் வழங்கியது. நிச்சயம் முந்தைய ஆண்டுகளை விட இரண்டு மடங்கு அதிகமாக வாசித்திருக்கலாம். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் அதிகம் வாசிப்புக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. திரைப்படங்கள் அதிகம் பார்க்கத் தொடங்கியதும் முக்கியக் காரணம். பெரும்பாலும் தமிழ் நூல்களே வாசித்திருக்கிறேன் (ஆங்கிலத்தில் வாசித்த ஒன்றிரண்டு நூல்களை கணக்கில் எடுப்பதே தகாது). “வாசிப்பு மாரத்தான்” என்று எனக்கு நானே போட்டி போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு நாளொன்றுக்கு ஒரு முழு நூலை வாசிக்க முயன்றேன். அதில் பெரும்பாலும் வெற்றியும் அடைந்தேன். புனைவு நூல்களே அதிகம்; அபுனைவு நூல்கள் குறைவு தான். எனினும் சில முக்கியமான நூல்களை இந்த ஆண்டு வாசித்திருக்கிறேன். 2021இல் அதிகம் வாசிக்க முயல வேண்டும்!

2020இல் வாசித்த நூல்களின் பட்டியல்:

1. ஆடுகளம் - என். சொக்கன்
2. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
3. காயத்ரி - சுஜாதா
4. கனவு தொழிற்சாலை - சுஜாதா
5. 24 சலனங்களின் எண் - கேபி
6. காதல் வனம் - தேனம்மை லக்ஷ்மணன்
7. சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்
8. The Girl in Room 105 - Chetan Bhagat
9. பொன்னியின் செல்வன் (5 பாகங்கள்) - கல்கி
10. யவன ராணி (2 பாகங்கள்) - சாண்டில்யன்
11. நந்தலாலா - மாலன்
12. ஃபாசிஸ்மும் படைப்பாளிகளும் - ரவிக்குமார்
13. பணம் பத்திரம் - செல்லமுத்து குப்புசாமி
14. எதிர்சொல் - பாரதி தம்பி
15. ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும் - ஜெயகாந்தன்
16. கங்கை எங்கே போகிறாள் - ஜெயகாந்தன்
17. ஒடலு - சாரா
18. ஒரு நாள் - க. நா. சுப்ரமணியம்
19. திலக்கியா -பிரவீன்குமார்
20. சாமான்ய மனிதனின் எதிர்க்குரல் - விஜய் மகேந்திரன்
21. இடைவெளி - சம்பத்
22. வரலாறும் வக்கிரங்களும் - ரோமிலா தாப்பர்
23. ஆச்சர்யம் ஆனால் உண்மை - ராஜேஷ் குமார்
24. கூகுள் - என். சொக்கன்
25. படைப்புகளின் உரையாடல் - ஜோ டி குரூஸ்
26. கல்மரம் - சுநீல் கிருஷ்ணன்
27. மறக்கவே நினைக்கிறேன் - மாரி செல்வராஜ்
28. பாரதியும் பாப்பாவும் - பெ. தூரன்
29. பிரபாகரன்: வாழ்வும் மரணமும் - பா. ராகவன்
30. அயோத்தி தாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும் - வே. வெங்கடாசலம்
31. பிரியத்தின் துன்பியல் - சி. சரவண கார்த்திகேயன்
32. பிரயாண நினைவுகள் - ஏ. கே. செட்டியார்
33. இந்தியனும் ஹிட்லரும் - பம்மல் சம்பந்த முதலியார்
34. வாசிப்பது எப்படி? - செல்வேந்திரன்
35. RSS: வரலாறும் அரசியலும் - பா. ராகவன்
36. திருப்பி அடிப்பேன் - சீமான்
37. இளமையில் கொல் - சுஜாதா
38. மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
39. மலை மாளிகை - சுஜாதா
40. மனிதன் மாறிவிட்டான் - இறையன்பு
41. மேலும் ஒரு குற்றம் - சுஜாதா
42. மாயா - சுஜாதா
43. கொலை அரங்கம் - சுஜாதா
44. அப்சரா - சுஜாதா
45. கருப்பி - அருணா ராஜ்
46. இந்தியக் கல்வியின் இருண்ட காலம்? புதிய கல்விக் கொள்கை குறித்த கட்டுரைகள்
47. ஒவ்வொரு கூரைக்கும் கீழே - ஜெயகாந்தன்
48. கலாச்சார இந்து - ஜெயமோகன்
49. பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா
50. உறுதி மட்டுமே வேண்டும் - சோம. வள்ளியப்பன்
51. ஞானபீடர் - யுகபாரதி
52. காந்தி யார் - வே. சாமிநாத சர்மா
53. விவேக், விஷ்ணு கொஞ்சம் விபரீதம் - ராஜேஷ்குமார்
54. நாம் ஏன் உடற்பயிற்சிகளை கைவிடுகிறோம்? அதிசா
55. பாரதி கட்டுரைகள் - தத்துவம் - பாரதியார்
56. Do It Today - Darius Forex
57. அறியப்படாத தமிழ் மொழி - KRS
58. இரவல் காதலி - செல்லமுத்து குப்புசாமி
59. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
60. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - தமிழ்மகன்
61. பாலை நிலப் பயணம் - செல்வேந்திரன்
62. உறைப்புளி - செல்வேந்திரன்
63. கனவுகளின் நடனம் - சாரு நிவேதிதா
64. இட ஒதுக்கீடு - நலங்கிள்ளி
65. நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் - இறையன்பு
66. அமுல் - ஒரு வெற்றிக்கதை - சொக்கன்
67. மனதோடு ஒரு சிட்டிங் - சோம. வள்ளியப்பன்
68. காதல் முதல் திருமணம் வரை - சோம. வள்ளியப்பன்
69. சங்கர் முதல் ஷங்கர் வரை - தமிழ்மகன்
70. ஊர்வன - பா. ராகவன்
71. வாலிப வார்த்தைகள் - யுகபாரதி
72. அம்பேத்கர் - ஆர். முத்துக்குமார்
73. குடுமி பற்றிய சிந்தனைகள் - ராபர்ட் கால்டுவெல்
74. தோள் சீலை போராட்டம் - கொல்லால் எஸ் ஜோஸ்
75. தெருவாசகம் - யுகபாரதி
76. இசை அல்லது இளையராஜா - யுகபாரதி
77. சாதிகளின் உடலரசியல் - உதயசங்கர்
78. பாரதிக்கும் எனக்கும் பழக்கம் - வ. உ. சி
79. நடைவண்டி நாட்கள் - யுகபாரதி
80. பட்டிமன்றமும் பாப்பையாவும் - சாலமன் பாப்பையா
81. கற்றுக்கொண்டால் குற்றமில்லை - பாலகுமாரன்
82. இடப்பக்க மூக்குத்தி - சுரேஷ்குமார் இந்திரஜித்
83. மகாகவி பாரதி சர்ச்சை - வ ராமசாமி & கல்கி
84. முன்னுதாரண முதல்வர் - யுகபாரதி
85. தோழமை எனும் தூய சொல் - யுகபாரதி
86. கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள் முருகன்
87. இரவு - ஜெயமோகன்
Image may contain: one or more people, text that says 'AREADER LIVES ATHOUSANDLIVES'

கருத்துரையிடுக

0 கருத்துகள்