முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஃபேஸ்புக் உலகில் தமிழ் வாழுமா? சாகுமா?

ஃபேஸ் புக் உலகில் தமிழ் - வாழுமா? சாகுமா?      தலைப்பை படித்தவுடனே 'இது என்ன அபத்தமான கேள்வி?' என்று உங்களுக்குத் தோன்றலாம். இப்படி எழுதியவன் எவனோ அவன் விலாசம் அறிந்து விலா எலும்பை முறிக்க வேண்டும் என்றும் தோன்றலாம். தலைப்பு என்பது பூவைத் தலையில் வைக்கும் பூப் போல. பூவைப் பார்த்தே பூவையின் அழகை அறிந்துவிடமுடியாது. அதுபோலத்தான் இத்தலைப்பும்.              உண்மையைச் சொல்லப் போனால், இந்த தலைப்பை இரண்டு தரப்பினர் ஆர்வமாகப் படிப்பர்.  "என்ன எழுதியிருக்கிறான்" என்ற ஆர்வத்தில் பார்க்கும் என் நண்பர்கள். இன்னொரு தரப்பு, 'தமிழ் அபிமானிகள்' என்று சொல்லிக் கொள்(ல்)பவர்கள். ஏதேனும் சிக்காதா என்று பூதக்கண்ணாடிக் கொண்டுத் தேடுபவர்கள். ஒரு வரி தமிழுக்கு எதிராக எழுதுவதுப் போல் தோன்றினாலே எழுதியவனை நையப் புடைப்பவர்கள். சரி, வளர்த்தது போதும், விஷயத்துக்கு வருகிறேன்.        தமிழ் மொழி என்று தோன்றியது என்பதில் முடிவான முடிவு இன்னும் ஏற்படவில்லை. அந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. எப்போது தொன...

முதல் எழுத்து

 நண்பர்களே,                             வணக்கம்....          வெகு நாட்களாகவே ஒரு 'Blog' தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முக நூலிலும், டிவிட்டரிலும், கூகுள் ப்ளஸிலும் நான் இருந்தாலும் வலைப்பூ என்பது என்னை எப்போதுமே ஈர்ப்பதாக இருந்தது. காரணம், மற்றவற்றை விட வலைப்பூவில் இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக செயல் பட முடியும் என்பதால் தான். அதுமட்டுமல்லாது, இன்று படித்துப் பார்க்காமலே ஒருவருடைய போஸ்ட் - க்கு 'லைக்' போடுவதும் கமென்ட் செய்வதும் இயல்பாகிப் போனதால் முக நூலில் நம்பிக்கைக் குறைந்ததும் ஒரு காரணம். நான் படித்த, கேட்ட, கோபப்பட்ட, சிந்தித்த, சிரித்த விஷயங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய எழுத்துகள் பாராட்டுக்கும் பகிர்வுக்கும் விமர்சனத்திற்கும் ஆளாக்கப்பட்டால் அதுவே என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று கருதுகிறேன். எனவே, நண்பர்களே, படியுங்கள். உங்களுடைய கருத்துகளை இடுங்கள்.      நிச்சயம் இந்த வலைப்பூ வித்தியாசமானதாய் இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம். ...