முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கள்ளில் அரசியல்

நேற்று ஒரு புத்தகம் படித்தேன். புத்தகத்தின் பெயரே வித்தியாசமானது.      "அ-சுரர்களின் அரசியல்". ஆசிரியர் ரவிக்குமார். 40 பக்கங்கள் மட்டுமே கொண்ட மிக எளிய நூல்.  ஆசிரியர் ஒரு கருத்தரங்கில் பேசிய உரைதான் இந்த நூல். அரை மணி நேரத்தில் படித்து விடலாம். ஆனால், படிக்கும்போதும் படித்த பின்பும் நம்மை சிந்திக்க வைக்கும் செய்திகளைக் கொண்டுள்ளது.  ஆசிரியர் இந்நூலில் சொல்லும் சில முக்கியமான செய்திகள் இவை: சுரர் என்பவர் வைதீகர்கள்.  அ-சுரர் என்று புராணங்களில் கொடூரமாக சித்திரிக்கப்பட்டவர்கள்  ஆதிகால பௌத்தர்கள். இந்த அசுரர்கள் பஞ்சமா பாதகங்களான கொலை, களவு, பொய், கள் அருந்துதல், குரு நிந்தை ஆகியவற்றை செய்யாதவர்கள். அதை ஒதிக்கியவர்கள். அதற்கு எதிராக பிரச்சாரமும் செய்தவர்கள். பிற்காலத்தில் நடந்த அரசியல் சூழ்ச்சியால் இவர்களை வர்ணக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி சூத்திரர்களாக ஒதிக்கிவிட்டனர் வைதிகர்கள். இந்த அசுரர்களே இன்றைய தலித்கள். தலித்களை வைத்து இன்று எவ்வாறு அரசியல் செய்யப்படுகிறது என்று ஆராய்கிறார் ஆசிரியர். நாமெல்லோரும் மது அருந்துவதைப் பற்றியும் புகைப...