முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

2025இல் வாசித்த நூல்கள்

20000 பக்கங்கள் வாசிக்க வேண்டும் என்பது 2025 ஆம் ஆண்டு தொடங்கியபோது நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி. அனால் வாசித்தது 13000 பக்கங்கள் மட்டுமே . குறைந்தபட்சம் 100 நூல்களாவது வாசிக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தேன். அதை எட்ட முடியவில்லை. 2025- இல் மொத்தம் 71 நூல்க ளே வாசித்திருக்கிறேன். இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண் டை விட சற்று அதிகம் என்றாலும் வாசிப்பில் நிறைவு ஏற்படாத ஆண்டு.     இந்த ஆண்டு கவிதை நூல்களை கணிசமாக வாசித்திருக்கிறேன் . குறிப்பாக கல்யாண்ஜி யின் கவிதைகள். நாவல் வாசிப்பு மற் றெ ந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு சற்று குறைவுதான் . எண்ணிக்கை அதிகம் என்றாலும் நூல்களின் தகுதியின் அடிப்படையில் சிறந்த நாவல்கள் அதிகம் வாசிக்கவில்லை. இந்த ஆண்டின் மத்தியில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன் . அந்த க் காலகட்டத்தில் ராஜேஷ்குமார் , இந்திரா சௌந்தர்ராஜன் , பட்டுக்கோட்டை பிரபாகர் , சுஜாதா போன்றவர்களே என்னை அதிலிருந்து வெளியேற்றி சற்று இளைப்பாற்றினர் என்று சொல்லலாம்.   வாசி த்த இந்த 71 நூல்களில் சில நூல் கள் குறித்து விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் . உதாரண...