முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2025இல் வாசித்த நூல்கள்

20000 பக்கங்கள் வாசிக்க வேண்டும் என்பது 2025ஆம் ஆண்டு தொடங்கியபோது நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி. அனால் வாசித்தது 13000 பக்கங்கள் மட்டுமே. குறைந்தபட்சம் 100 நூல்களாவது வாசிக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தேன். அதை எட்ட முடியவில்லை. 2025-இல் மொத்தம் 71 நூல்களே வாசித்திருக்கிறேன். இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டை விட சற்று அதிகம் என்றாலும் வாசிப்பில் நிறைவு ஏற்படாத ஆண்டு. 

 


இந்த ஆண்டு கவிதை நூல்களை கணிசமாக வாசித்திருக்கிறேன். குறிப்பாக கல்யாண்ஜியின் கவிதைகள். நாவல் வாசிப்பு மற்றெந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு சற்று குறைவுதான். எண்ணிக்கை அதிகம் என்றாலும் நூல்களின் தகுதியின் அடிப்படையில் சிறந்த நாவல்கள் அதிகம் வாசிக்கவில்லை. இந்த ஆண்டின் மத்தியில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா போன்றவர்களே என்னை அதிலிருந்து வெளியேற்றி சற்று இளைப்பாற்றினர் என்று சொல்லலாம்.

 


வாசித்த இந்த 71 நூல்களில் சில நூல்கள் குறித்து விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். உதாரணத்துக்கு க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா’, எம்.ஜி. சுரேஷின் யுரேகா என்றொரு நகரம்’, சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடனமங்கை’, கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘கொமறு காரியம்’, கி.அ.சச்சிதானந்தத்தின் உயிரியக்கம், ‘புதுமைப்பித்தனின் சம்சார பந்தம்’, சின்ன அண்ணாமலையின் சொன்னால் நம்பமாட்டீர்கள்’, மருத்துவர் ஷாலினியின் அர்த்தமுள்ள அந்தரங்கம்’ போன்றவை. ஆனால் எழுதுவதற்கான உளம் இந்த ஆண்டு அமையவே இல்லை. 


2026 ஆம் ஆண்டு 25000 பக்கங்களாவது வாசிக்க வேண்டும் என்பது இலக்கு. பல முக்கியமான நூல்கள் வாசிப்பு பட்டியலில் இருக்கின்றன. பார்ப்போம். எண்ணிய முடிதல் வேண்டும்!

இந்த ஆண்டு வாசித்த நூல்களின் பட்டியல் கீழே:


நாவல்கள்:

1.   செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை

2.   அன்னா - வாசு முருகவேல்

3.   பொண்டாட்டி - அராத்து

4.   யுரேகா என்றொரு நகரம் - எம்.ஜி.சுரேஷ்

5.   பத்து செகண்ட் முத்தம் – சுஜாதா

6.   எதையும் ஒருமுறை – சுஜாதா (மீள் வாசிப்பு)

7.   சில்வியா – சுஜாதா

8.   கடலோரக் குருவிகள் – பாலகுமாரன்

9.   காற்றோடு ஒரு யுத்தம் - இந்திரா சௌந்தர்ராஜன்

10. நாகவனம் - இந்திரா சௌந்தர்ராஜன்

11. திருவண்ணாமலை - இந்திரா சௌந்தர்ராஜன்

12. ஆத்மா - இந்திரா சௌந்தர்ராஜன் 

13. புருஷ வேட்டை - இந்திரா சௌந்தர்ராஜன்

14. கிரைம் - ரா. கி. ரங்கராஜன் 

15. ஜரிகை மேடை - பட்டுக்கோட்டை பிரபாகர்

16. உயிர் விடு தூது - ராஜேஷ் குமார்

17. தூரத்து துரோகம் - ராஜேஷ்குமார் 

18. வினோத் ஒரு வினாக்குறி - ராஜேஷ் குமார்

19. ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம் – ராஜேஷ்குமார்

20. ரத்த ராஜ்ஜியம் – ராஜேஷ்குமார்

21. நிற்காத நிழல் ஒன்று – ராஜேஷ்குமார்

22. மற்றொரு நாள் – ராஜேஷ்குமார்

23. இலவசம் ஒரு வானவில் – ராஜேஷ்குமார்

24. அன்று நிர்மலா இன்று பரிமளா – ராஜேஷ்குமார்

25. முள் நிலவு - ராஜேஷ்குமார் 

26. இரவல் காதலி - செல்லமுத்து குப்புசாமி

 

சிறுகதை தொகுப்பு:

27. மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் - சுந்தர ராமசாமி

28. நடன மங்கை - சுரேஷ்குமார இந்திரஜித்

29. கொமறு காரியம் - கீரனூர் ஜாகிர்ராஜா

30. உயிரியக்கம் - கி.அ. சச்சிதானந்தம்

31. முதல் குரல் - பாரதி பாஸ்கர்

32. அம்மாவின் டைரி - குடந்தை பிரேமி

33. தியாகம் தந்த பரிசு - டாக்டர் அருட்கவி அரங்க. சீனிவாசன்


கட்டுரை தொகுப்பு:

34. எனது பயணம் - அப்துல் கலாம்

35. தொல்காப்பியப் பூங்கா – கலைஞர் மு. கருணாநிதி

36. தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் – ஜெயமோகன்

37. புதுமைப்பித்தனின் சம்சார பந்தம் - கமலா புதுமைப்பித்தன்

38. படித்திருக்கிறீர்களா? – க.நா. சுப்ரமணியம்

39. அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே – எம்.ஜி. சுரேஷ்

40. சடங்குகளின் கதை - அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

41. சொன்னால் நம்பமாட்டீர்கள் - சின்ன அண்ணாமலை

42. கிரிப்டோ கரன்சி: ஓர் அறிமுகம் - நா. கோபாலகிருஷ்ணன் 

43. ஏறிக் குதிக்க ஓர் ஏழடிச் சுவர் - பாரதி பாஸ்கர்

44. தொட்டதெல்லாம் பொன் - சோம. வள்ளியப்பன்

45. பண வாசம் - குரு மித்ரேஷிவா

46. தயங்குவது ஏன் இன்னும் - முருகு தமிழ் 


கவிதைகள்:

47. விதானத்துச் சித்திரம் - ரவி சுப்பிரமணியன்

48. பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் -  மனுஷ்யபுத்திரன் 

49. இடமும் இருப்பும் - மனுஷ்யபுத்திரன் 

50. பூனை எழுதிய அறை - கல்யாண்ஜி

51. என் ஓவியம் உங்கள் கண்காட்சி - கல்யாண்ஜி

52. மூன்றாவது முள் - கல்யாண்ஜி

53. மீனைப் போல இருக்கிற மீன் – கல்யாண்ஜி

54. அந்தரப் பூ - கல்யாண்ஜி

55. நொடி நேர அரை வட்டம் – கல்யாண்ஜி

56. புலரி - கல்யாண்ஜி 

57. வீட்டிற்கு வெளியே வெவ்வேறு சுவர்கள் - யுகபாரதி

58. மழைப்பேச்சு - அறிவுமதி

59. மூன்றாம் நாள் பெண் - கண்மணி குணசேகரன்

60. சாளரக் கனவுகள் – குடந்தை பிரேமி


அரசியல், வரலாற்று நூல்கள்:

61. கறுப்பு வெள்ளை - பாலு சத்யா

62. மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை ஆர் வெங்கடேஷ்

63. சாமிகளின் பிறப்பும் இறப்பும் - ச. தமிழ்ச்செல்வன் 

64. மார்க்ஸ் என்னும் மனிதர் - என். ராமகிருஷ்ணன்

65. தக்கர் கொள்ளையர்கள் – இரா. வரதராஜன்


மனநலம்/மருத்துவ நூல்கள்:

66. குழந்தை வளர்ப்பு அறிவியல் - ஸ்டீபன் ருடால்ப் 

67. அர்த்தமுள்ள அந்தரங்கம் – Dr. ஷாலினி

68. உயிர்மொழி – Dr. ஷாலினி

69. உணர்ச்சிகள்: பாகம் 1 - Dr. நாராயண ரெட்டி 

 

சினிமா:

70. கரங்களே சாட்சி – எஸ். ராமகிருஷ்ணன்

71. இலக்கிய சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - பேராசிரியர் கு ஞானசம்பந்தன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...