பிரபு காளிதாஸ் அவர்கள் முன்பு ஒருமுறை தன்னுடைய முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் தொலைக்காட்சியில் கதை சொல்வதாகவும் அதைப் பார்த்ததும் தனக்குச் சிரிப்பு வந்ததாகவும் சொல்லியிருந்தார். விளம்பர வெளிச்சத்துக்காக அவர் இப்படிச் செய்திருக்கலாம் என்றும் குறிப்பிடிருந்தார். அந்தப் பதிவிற்கு ஆதரவான கருத்துகள் பெரும்பாலும் இல்லை, ஒன்றிரண்டைத் தவிர. ஒன்றுமே தெரியாமல் பலர் நிகழ்ச்சி நடத்தும்போது இறையன்பு போன்ற விஷயம் தெரிந்தவர்கள் பேசுவதில் தவறில்லை என்றே பலரும் சொல்லியிருந்தனர். பின்னூட்டங்களிலும் சில கருத்துக்களை பிரபு காளிதாஸ் சொல்லியிருந்தார். அவருடைய கருத்துக்கள் இவை: 1. கதை சொல்வதற்காக ஒருவர் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டுமா? 2. அவர் இறங்கி அடிக்க வேண்டிய களங்கள் நிறைய இருக்கின்றனவே? அதை விட்டு ஏன் கதை சொல்கிறார்? 3. சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்வதை விட்டுவிட்டு இவரே உட்கார்ந்து புத்தகம் எழுதுவது சரியா? 4. தானும் தொலைக்காட்சியில் வருகிறோம் என்ற அற்ப ஆசைக்காக கூட அவர் கதை சொல்ல ஒத்துக்கொண்டிருக்கலாம். 5. கதை சொல்ல ஒப்புக்கொண்டிருக்கும் இறை...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!