மகன் அதியன் அருட்பொழில் பிறந்தவுடன் சில விஷயங்கள் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதிலொன்று அவனுக்காகவும் எனக்காகவும் சில புத்தகங்கள் வாங்க வேண்டும் என்பது. அந்தப் புத்தகங்கள் அவன் பிறந்த மாதத்தில் வாங்கியுள்ளதால் அது எப்போதும் பசுமையான நினைவாக பின்னாளில் எனக்கும் அவனுக்கும் இருக்கும். அதியன் பிறந்த மே மாதத்தில் கீழே சொல்லியிருக்கும் ஆறு நூல்களை இணையம் மூலமாக வாங்கினேன். நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ள இந்தப் புத்தகங்கள் சென்னைப் புத்தகத் திருவிழாவில் கூட கிடைக்கவில்லை. அங்கே விசாரித்த போது விஷ்ணுபுரம் வலைதளத்தில் கிடைக்கும் என்றனர். எனவே இந்த ஆறு நூல்களையும் விஷ்ணுபுரம் வலைதளத்தில் வாங்கி இருக்கிறேன். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்: மிக அற்புதமான, நேர்த்தியான பேக்கேஜிங் (நல்ல தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை. பொதிதல், கட்டுதல் என்பதெல்லாம் இணையான சொல்லாகத் தோன்றவில்லை). சிறு பிசிறு கூட இல்லாத, எந்தவித பாதிப்பும் இல்லாத அந்நூல்களை கைகளால் பிரித்துப் பார்த்தபோது மிகுந்த மனநிறைவை அடைந்தேன். விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு இதற்காகவ...
கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது. இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...