சென்னை புத்தகத் திருவிழாவுக்கு இதுவரை நான் சென்றதில்லை. ஆனால், போகவேண்டும் என்ற ஆசை மட்டும் காதல் மிகுதியால் கசிந்துருகி பசலை நோய் வந்த சங்க காலத் தலைவி போல் எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. நம் ஊரில் இப்படி ஒன்று எப்போது நடக்கும் என்று நான் எதிர்பார்த்த ஒன்று இப்போது நடந்திருக்கிறது. ஆம். தஞ்சையில் முதன்முறையாக பெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஜூன் 12 முதல் 21 வரை. முதலில், இதை முன்னெடுத்து நடத்திய தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர். சுப்பையன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன். திரு. சுப்பையன் பொறுப்பேற்ற பிறகு மிக முக்கியமான இரண்டு பரிசோதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவை வெற்றியும் கண்டுள்ளன. ஒன்று - தஞ்சை மாவட்டம் முழுதும் 12 மணி நேரத்தில் 12 லட்சம் மரக்கன்றுகள் நட்டு அதை ஒரு கின்னஸ் சாதனைக்காக முயன்றார். என் தெருவில் கூட 12 மரக்கன்றுகள் வளர்ந்து வருகின்றன. இரண்டாவது - இத்தனை ஆண்டு காலம் இல்லாத ஒரு திருவிழாவை முதன் முறையாக நடத்தியிருக்கிறார். 120 ஸ்டால்களில் பெரும் புத்தகக் கண்காட்சி. தஞ்சையின் சரஸ்வதி மகால் நூலகம் உலகப் பெயர் பெற்றது. அதனருகே, அரண்மனை வளாக மை...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!