முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்தகங்களைக் கொண்டாடுவோம்!

திருவிழா என்றவுடன் அது நிச்சயம் கடவுள் நம்பிக்கையோடு தொடர்புடையது என்றே நம் பொது மனம் யோசிக்கும். அல்ல. திருவிழா என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு. ஒரு சமூகத்தின் பல்வேறு வகையான மக்களை ஒன்றிணைப்பது. அது ஒரு கூட்டுக் கொண்டாட்டம்.  சமீப காலங்களில் புது வகையான திருவிழாக்கள் நடக்கின்றன. அதில் ஒன்று புத்தகத் திருவிழா. புத்தகத் திருவிழா என்று சொல்லும்போதே எனக்குள் பிறக்கும் உவகையை வர்ணிக்க முடியவில்லை. புத்தகங்களைக் கொண்டாடாமல் வேறு எதை நாம் கொண்டாடப் போகிறோம்? புத்தகங்களை ஒரு சமூகம் எந்தளவு கொண்டாடுகிறதோ அதை விட அதிகமாகவே அதன் வளர்ச்சி எல்லா நிலைகளிலும் இருக்கும் என்பது திண்ணம். அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லமுடியும். அந்த வகையில் என் தஞ்சை மண்ணில் இரண்டாம் ஆண்டாகப் புத்தகத் திருவிழா கடந்த மாதம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.  10 நாள் நடைபெற்ற அந்தத் திருவிழாவுக்கு நாள்தோறும் செல்ல வேண்டும் என்பதே ஆசை. முயன்றேன். என்றாலும், முடியவில்லை. ஐந்து நாள் சென்று வந்தேன்.  நான் வாங்கிய புத்தகங்கள் இந்த ஆண்டுப் புத்தகத் திருவிழாவிலும் மொத்தம் 120 அரங்குகள். ஆனால், உயிர்மை பத...