மு.கு: மே 9, 2015 அன்று உலகத் திருக்குறள் மையம், பாபநாசம் நடத்திய "வள்ளுவத்தை வாழ்வியலாக்க இயலுமா? இயலாதா?" என்ற பட்டிமன்றத்தில் இயலும் என்ற அணியில் நான் பேசிய உரையின் எழுத்து வடிவம். 43ஆம் அதிகாரத்தை முழுமையாகப் பெற்று 12ஆம் அதிகாரத்தோடு விளங்கும் நடுவர் அவர்களுக்கும், வள்ளுவத்தை வாழ்வியலாக்க இயலாது என்பதை நிரூபிக்க இயலும் என்ற நம்பிக்கையில் பேசி முடித்த எதிரணியினருக்கும், எனக்கு முன்னால் பேசிய என் அணியினருக்கும், நண்பர்களுக்கும் மற்ற அனைவருக்கும் என் பணிவான வணக்கம்!!! எனக்கு இப்போது ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது, நான் எடுத்து வந்த கருத்துக்களைப் பேசுவதா? அல்லது எதிரணியினரின் கருத்துகளுக்கு எதிர் கருத்து பேசுவதா என்ற குழப்பத்தில் இருக்கிறேன். முடிந்த வரையில் இரண்டையுமே பேசுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அது இப்படிப் பகன்றது – ‘மனிதர்கள் தவறு செய்யப் பயப்படக்கூடாது. ஏனென்றால் வாழ்க்கை ஒன்றும் பயன்பாட்டுக் கையேட்டோடு வருவதில்லை’. படித்தவுடன் எனக்கு இது பிடித்தது. கொஞ்சம் சிந்துத்துப் பார்த்தபோது இது தவறு என்றும் ...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!