முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வள்ளுவரின் உழவியல் பார்வை - 3

விவசாயப் பொருளாதாரம் பற்றி வள்ளுவர்:  வளர்ந்த நாடுகளில் 10% மக்களும் வளரும் நாடுகளில் 60% மக்களும் தங்களின் வாழ்க்கையை வேளாண்மை மூலமே நடத்தி வருகின்றனர். 14 இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது விவசாயம் தான். 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 58% வேலைவாய்ப்புகள் இந்தத் துறையில் தான் உள்ளன. மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் (CSO) 2011 கணக்கெடுப்பின் படி நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மையும் அது சார்ந்த தொழிகளும் 14.2% இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 15 பல நாடுகளில் பெரிய பரப்பளவிலான நிலங்கள் உள்ளன. ஆனால், அவை வேளாண்மைக்கு ஏற்றதாக இருக்கவில்லை. இந்தியா இயற்கையால் வரமளிக்கப்பட்ட நாடு. இங்கே 62% நிலம் வேளாண்மை செய்வதற்கு ஏற்ற நிலமாக இருக்கிறது. 11  உழவுக்கு இன்றியமையாத தேவை நீர். முறையான பாசன வசதி இருந்தால்தான் நல்ல விளைச்சல் தர முடியும். நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாள்பவர்களுடையது. உழவர்களுக்குச் சிறந்த பாசன வசதி செய்து கொடுக்கும் மன்னர்களையே வரலாறு பேசும். கல்லணை கட்டிய கரிகாலனைத் தான் உலகம் இன்று வரை போற்றுகிறது. ...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

வள்ளுவரின் உழவியல் பார்வை - முன்னுரை

இதுவரை எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களிலேயே அதிக முறை ஆய்வு செய்யப்பட்ட இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும். இரண்டு கிலோ ஆண்டுகளாக ஓர் இலக்கியம் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால் அது குறள் மட்டுமே. குறளின் சிறப்பை குறள் போல் இரண்டு அடியில் சுருக்கி விட முடியாது. நான் உலகத் திருக்குறள் மையத்திலே உறுப்பினராக இருக்கிறேன். மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்கிறேன். இரண்டு முறை குறள் பற்றிச் சொற்பொழிவும் ஆற்றியிருக்கிறேன்.  பல நாட்களாகவே எனக்கு ஒரு வருத்தம் உண்டு. இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அனைவருமே வயதானவர்கள் (என்னைத் தவிர). ஆம். மற்ற அனைவருமே நாற்பத்தைந்து வயதைத் தாண்டியவர்கள். பலர் அறுபது வயது காரர்கள். இளைஞர்கள் இல்லா குறளரங்கம் ஒரு வித சலிப்பையே எனக்கு ஏற்படுத்தியது. முடிந்த வரையில் என் நண்பர்களை "கட்டாயப்படுத்தி" அழைத்துச் சென்றிருக்கிறேன். ஆனாலும், அவர்கள் தொடர்ச்சியாக வருவதில்லை. காரணம், கூட்டங்களில் ஒரு சிறப்பு அழைப்பாளர் வந்து ஏதேனும் ஒரு தலைப்பில் நீண்ட உரையாற்றுவார். அதற்கு முன்னதாக, மைய உறுப்பினர்கள் பல நிமிடங்கள் குறள் சொல்லி, ...