இரவுக்கு வாசனை உண்டா? இரவுக்கென்று மணம் இருந்தால் அதுதான் ‘யாமம்’. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அற்புதமான நவீன நாவல் யாமம். இரவு என்பது நம்மில் பலரும் முழுதாகப் பார்த்து முடிக்காத, அனுபவிக்காத அற்புதமான பொழுது. நம் அகவுலகை பார்க்க உதவுவது இரவு. அந்த அகவுலகை நான்கு பேரின் வாழ்க்கையின் ஊடாக 360 பக்கங்களில் விவரிப்பதே இந்த நாவல். இது பல வகையில் அற்புதமான நாவலாக எனக்குத் தோன்றுகிறது. இந்த நாவலை முதலில் படிக்கத் தொடங்கிய போது ஏதோ மொழிபெயர்ப்பு நூலைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. கதை மாந்தர்களின் பெயரும் கதைக் களமும் கொஞ்சம் அந்நியமாகத் தோன்றின. ஆனால், கதை செல்ல செல்ல மிகவும் நெருக்கமாக உணர முடிந்தது. கதாபாத்திரங்கள் மனதைப் பிடித்துக்கொண்டு நகர மறுத்தனர். ‘குறுமிளகின் கதை’, ‘முதல் சாசனம்’, ‘காற்றும் வெயிலும்’ என்ற மூன்று எழுதாக் கதைகள் சொல்லப்பட்ட பின்புதான் நேரடி கதை ஆரம்பமாகிறது., ‘மதராப்பட்டணம் என்னும் கடற்பாக்கம்’ என்ற அத்தியாயத்தில் சென்னை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உருவானது என்பதை மிக அழகாகச் சொல்கிறார். மிளகு வியாபாரம் செய்ய டச்சு நாட்டு வ...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!