முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யார் இவன்?

பரவாயில்லை...சமூக வலைத்தளங்களில் கணிசமான பகிர்வுகளும் தகவல்களும் பரிமாரப்பட்டுள்ளன. மகிழ்ச்சி.  மகாகவி பாரதியின் 133ஆம் பிறந்த நாள் பகிர்வுகளைப் பற்றிதான் குறிப்பிட்டேன். சமூக வலைத்தளங்களையும் செய்தித் தாள்களையும் கவனித்தேன். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பாரதிக்குக் கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் எளிது. மத்திய அமைச்சர் தருண் விஜயின் முயற்சியால் பாரதியின் பாடல்களை மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும் அவர் பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் கிடைத்தக் கூடுதல் கவனம். மகிழ்ச்சியான செய்தி. இதைத்தான் பாரதியும் எதிர்பார்த்தான். தன் பாடல்கள் தீப்பெட்டியை விட மலிவாக விற்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.  பாரதியைப் பற்றி எழுத முற்படும்போது எதை எழுதுவது என்ற தடுமாற்றம் வருகிறது. காரணம், பாரதியின் பன்முக ஆளுமை. எழுத்தின் எல்லா சாத்தியக்கூறுகளையும் பாரதி முயற்சித்துள்ளான். இலக்கண விதிகளுக்கு உட்பட்டு செய்யுள்களும் இயற்றியிருக்கிறான். இலக்கணத்தை மீறி புதி விதிகளும் சமைத்திருக்கிறான். அவனுடைய பன்மொழி ஆளுமை,...