மு.கு: பெரியாரின் பிறந்தநாளையொட்டி கடந்த ஆண்டு 'உண்மை' பத்திரிகை நடத்திய சிறுகதை போட்டிக்கு அனுப்பிய கதை. அனுப்பி 9 மாதங்கள் ஆனபிறகும் இன்னும் முடிவுகளை அப்பத்திரிகை வெளியிடாதலால் பொறுமையிழந்து இப்போது இங்கே பதிவேற்றுகிறேன் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------ கடந்த பத்து நாட்களாக சந்திரிகா நடந்துகொள்வது அவளுடைய குடும்பத்தினர் யாருக்கும் துளியும் பிடிக்கவில்லை. அவர்களுக்கு இவள் செய்வதெல்லாம் மகா முட்டாள்தனமாகத் தெரிந்தது. சந்திரிகாவுக்குத் திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதத்தில் அவளிடம் காணாத குறையெல்லாம் இப்போது காண்கிறார்கள். முக்கியமாக அவளுடைய மாமியார். இவள் குடும்பம் நடத்தத் தகுதியில்லை என்பது மாமியாரின் எண்ணம். இந்து மத சடங்குகளெல்லாம் செய்து நடத்தி வைத்த திருமணம். திருமணம் முடிந்து ஒரு வாரத்துக்கு படு பிஸியாகப் போனது. மறுவீடு, கறி விருந்து என்பதோடு நில்லாமல் தெரிந்த உறவினர்கள் பலரும் தங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தனர். அவள் ஒன்றும் மற்ற பெண்க...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!