முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்வீடு (சிறுகதை)

“நல்ல பாட்டு சார்” என்று சொல்லி ஒலியைச் சிறிது கூட்டி வைத்தான் சுமன். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல்தான். ஆனால் இன்று என் கவனம் அதில் செல்லவில்லை.  “முதல் சரணத்துக்கு முன்னாடி வர வீணை இசை என்னமா இருக்கு? இப்படி எல்லாம் எப்படி இசையமைக்க முடியுது?” என்றான் மீண்டும் என் கவனத்தைக் கோர. அவனும் இப்போதெல்லாம் பல்லவி, சரணம், இடையிசை, முகப்பிசை, ஆலாபனை என்று கொஞ்சம் பேசக் கற்றுக்கொண்டுள்ளான். ஆனால் அவனால் ஒலியைக் கொண்டு இசைக்கருவியை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அவன் சொன்ன அந்தப் பாடலில் வந்தது வீணை அல்ல சித்தார் என்று நான் சொல்லி இருக்க வேண்டும். இப்போதிருக்கும் மனநிலையில் எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. காரில் பயணம் செய்யும் போது பாட்டு கேட்காமல் நான் செல்வதில்லை. ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சிலாகித்துக் கொண்டே பயணம் செய்வேன். குறிப்பாக இசைக்கருவிகள் மீது எனக்குத் தீராத ஆர்வம். ஒவ்வொரு இசைக்கருவியையும் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்வேன். சிறு வயதிலிருந்து என் காதுகளுக்குக் கொடுத்த பயிற்சி இது.  சுமனுக்கு நான் இப்படி இருப்பது ஆச்சர்யமாக இருந்திருக்க வேண்டும். அந்தப் பாடல் முடியும் வ...