முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத வைத்த எழுத்து

இந்தத் தலைப்பில் நான் எழுத நேரிடும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.  மனத்தின் கணத்தோடுதான் எழுதுகிறேன். இப்போது என்னை எழுத வைத்தது ஜெ.கே என்னும் இரண்டெழுத்து.  ஜெயகாந்தன் இறந்துவிட்டாராம். ஜெயகாந்தன் யாரென்று கேட்கமாட்டீர்கள். அவரை அறியாதோர் தமிழ் இலக்கியத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஜெயகாந்தனின் முகத்தை பலர் பார்த்திராமல் இருக்கலாம். அவர் கதைககளைக் கூட பலர் வாசித்தறியாதிருக்கலாம். ஆனாலும், ஜெயகாந்தன் என்ற பெயரைக் கேள்விப் படாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த காந்தம் தான் ஜெயகாந்தன். என் பள்ளிப் பருவம். எல்லோரையும் போல் நானும் முதலில் சுஜாதாவின் கதைகளைத்தான் படித்தேன். அதன் பிறகே ஜெ.கே வை அறிந்தேன். அவருடைய "சில நேரங்களில் சில மனிதர்கள்" நாவலை 100 பக்கங்கள் படித்தேன்.  பிடிக்கவில்லை. ' அப்படி ஒன்றும் பெரிதாக இவர் எழுதிடவில்லையே. இதற்கா சாகித்ய அகாடமி விருது கொடுத்தார்கள்?இது ஒரு தொடர் கதை. நாவல் என்று சொல்லமுடியாது' என்றெல்லாம் முடிவு கட்டிவிட்டேன். பிறகுதான் புரிந்தது, அப்போது நான் வாசிப்பின் ஆரம்ப நிலையைக்  கூட தாண்டவில்லையென்று. வாசிப்பு பெருக பெருக...