ஜெயமோகனின் " ஏழாம் உலகம்" நாவலை முன் வைத்து . எத்தனையோ முறை கோயிலுக்குச் சென்றிருக்கிறீர்கள் தானே ? வழியில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு கோயிலுக்குள் செல்வதற்கு முன் ஒருமுறை கூட பிச்சையிட்டதில்லை அல்லவா ? உள்ளே சென்று உங்கள் வேண்டுதல்களைச் சமர்ப்பித்துவிட்டு வெளியேறும்போது ஒரே ஒரு பிச்சைக்காரனிடம் பணத்தைக் கொடுத்து தங்களுக்குள் பிரித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு உடனே கிளம்பிவிடுவீர்கள்தானே ? நாம் கவனிக்கத் தவறிய அந்த மனிதர்களின் உலகம் எப்படிப்பட்டது என்று யோசித்திருக்கிறீர்களா ? கை கால் இல்லாதவர்கள் , கூனர்கள் , குருடர்கள் , முன் கழுத்திலிருந்து நெஞ்சு வரை தொங்கும் கழலை கொண்டவர்கள் , பெரிய விரைகளைக் கொண்டவர்கள் , விகாரமான முக அமைப்பைக் கொண்ட பெண்கள் , எந்த வடிவத்திலும் சேராத உடலமைப்பைக் கொண்ட குழந்தைகள் — இப்படி உடல் குறைகளோடு பிச்சை எடுக்கும் அந்த மனிதர்களின் உலகம் தான் எழுத்தாளர் ஜெயமோகனின் “ ஏழாம் உலகம் ” . காற்றிலிருந்து கடல் வரை சந்தைப் படுத்தப்படாதவை என்று இங்கே எதுவும் இல...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!