எனக்கு இரண்டு முறை பேய் பிடித்திருக்கிறது. என்னடா இது, கடவுள் மீதும் பேய் மீதும் நம்பிக்கை இல்லாதவனுக்கா என்று நண்பர்கள் ஆச்சர்யப்படக்கூடும். உண்மைதான். அந்தப் பேய் பிடித்த அனுபவத்தைதான் சொல்லப் போகிறேன். கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது முதல்முறை பேய் பிடித்தது. இரண்டாம் முறைதான் மறக்கவே முடியாதது. அது நான் வீட்டில் இருந்தபோது வந்தது. அப்போது நான் கல்லூரி இறுதி ஆண்டுப் படித்துக்கொண்டிருந்தேன். கடைசிச் செமஸ்டர். ப்ராஜக்ட் வேலைகள் முடிக்கப்படாமல் இருந்தன. இன்னும் மூன்று நாள்களுக்குள் முழுதும் முடித்துச் சமர்ப்பிக்க வேண்டிய நிலை. இரவு பகல் பாராமல் இறுதி வடிவத்தைத் தயார் செய்து கொண்டிருந்தோம். (கடைசி நேரம் என்பதால்தான் இந்த இரவு பகல் பாராத உழைப்பு). மெய்யாகச் சொல்கிறேன். அந்த மூன்று நாள் நான் இம்மி கூடத் தூங்கவில்லை. கண்ணை மூடிப் படுத்தால் அடித்துப் போட்டது போல் தூங்க நேரிடும் என்ற பயத்தில் தூக்கம் வரும்போதெல்லாம் நடந்துகொண்டே பாட்டுக் கேட்பேன். பாடவும் செய்வேன். ப்ராஜக்ட் ரிவீவ் முடிந்து வீட்டுக்கு வந்து தூங்கியபோது மணி இரவு ஒன்றாகியிருந்தது. அப்ப...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!