முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

2021இல் வாசித்த நூல்கள்

ஆம். தலைப்பு சரி தான். டிசம்பர் 2021 இறுதியிலோ ஜனவரி 2022 முதல் வாரத்திலோ எழுதியிருக்க வேண்டிய பதிவு இது. முழுதாக ஓராண்டு தாமதமானது பணிச்சுமையால் என்றால் அது பொய். செயலூக்கம் இன்மையே முதன்மை காரணம். (இருந்தாலும் ஒரு வருஷம் ரொம்பத்தான் தாமதம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.) இப்போதாவது பகிர்ந்து கொள்ள முடிந்ததே என்ப தே எனக்கு மகிழ்ச்சி தான். 2021இல் நான் வாசித்த நூல்கள் குறித்த பதிவே இது . மொத்தம் 84 நூல்கள் வாசித்திருக்கிறேன். 2020- ஆம் ஆண்டை விட அதிகம் வாசிக்க வேண்டும் என்ற திட்பத்தோடுதான் 2021- ஆம் ஆண்டைத் தொடங்கினேன். என்றாலும் முதல் மாதத்திலேயே தனிப்பட்ட சில நிகழ்வுகளால் தொடர்ந்து வாசிப்பதற்கான நேரம் வாய்க்கவில்லை. அது சென்ற ஆண்டின் இறுதி வரை தொடர்ந்தது. மேலும் அந்நிகழ்வுகளால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். எனவே தீவிர படைப்புகளை வாசிக்க மனம் கூடவில்லை. சொல்லப்போனால் வாசித்து என்ன ஆகப்போகிறது என்ற மனநிலையில்தான் இருந்தேன். ஆனாலும் இசையும் வாசிப்பும் தவிர மீள்வதற்கு வேறு மார்க்கமும் தெரியவில்லை. அதனால் தீவிர நூல்கள் தவிர்த்து நேரத்தைக் கடத்தும் மிகச் சாதாரண நூல்களையே அத...