முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அட்டையில்லா நூல்களும் பொது நூலகங்களும்

பாபநாசம் கிளை நூலகத்தில் புத்தகங்களை மாற்றச் சென்றபோது ஓர் அறிவிப்பு கண்ணில் பட்டது: 'மோசமான நிலையில் உள்ள புத்தகங்களை குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்'. பதிப்பித்து 20 ஆண்டுகளுக்கு மேலான, கொஞ்சம் மோசமான நிலையில் இருக்கும் நூல்களை குறைந்த விலைக்கு விற்க அரசு பொது நூலகங்களுக்கு அனுமதி உண்டு. மேலிடத்தில் அதற்கான அனுமதி பெற்று அப்படி விற்கலாம். அந்த அறிவிப்பைப் பார்த்த சில நாளில் மீண்டும் நூலகத்துக்குச் சென்று வேண்டிய நூல்களை ஒவ்வொரு கட்டாகப் பிரித்துத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினேன். எல்லா நூல்களிலும் அட்டை கிழிக்கப்பட்டிருந்தது. எனவே உள்ளே தலைப்பைப் பார்த்துத்தான் நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் செலவழித்து அனைத்துக் கட்டுகளையும் பிரித்து நூல்களைத் தேர்ந்தெடுத்தேன். அப்படி மொத்தம் 44 நூல்கள் கிடைத்தன. பெரும்பாலும் மிக முக்கியமான நூல்கள். நூல் பட்டியல் கீழே: நாவல்கள் 1. ஜே ஜே: சில குறிப்புகள் — சுந்தர ராமசாமி 2. 1084இன் அம்மா — மகாசுவேதா தேவி 3. பாசத்தீ — மேலாண்மை பொன்னுச்சாமி 4. சிதம்பர ரகசியம் — பூரணச்சந்திர தேஜஸ்வி 5. அவன் ஆனது ...