முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியும் இடைவிடா இருமலும்

வடமொழியால் பட்ட பாடு போதும் என்ற மன நிலையில் இருந்த தமிழர்களுக்கு அடுத்த தலைவலியாய் வந்து சேர்ந்தது இந்தித் திணிப்பு. இந்தியை இந்தியா முழுவதும் கட்டாயமாக்கிய நேரு பலத்த கண்டனத்துக்கு உள்ளானார். திராவிட இயக்கங்களும் மாணவர்களும் தமிழக மக்களும் வீதியில் இறங்கி தங்கள் மொழிக்காகப் போராடியது இந்தியை கட்டாயத்திலிருந்து விருப்பத்துக்கு கொண்டு சென்றது. அந்த 1960களிலிருந்து இந்தியை ஊடுருவ விடாமல் இரும்புத்திரைப் போட்டு பாதுகாத்து வருகின்றனர். எனினும், அமைதியாக மக்கள் இந்தியின் மீது ஈர்ப்பு கொண்டுள்ளனர் என்பதும் உண்மை. அதன் வெளிப்பாட்டை இரண்டு வாரங்களுக்கு முன்னால் (ஆகஸ்ட் 9, 10 தேதிகளில்) தஞ்சை உமா மகேஸ்வரனார் கல்லூரியில் கண்டேன். .  தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா என்ற அமைப்பு தென் இந்திய மக்கள் இந்தி கற்க அருமையான பாடத் திட்டதோடு  எட்டு தேர்வு நிலைகளில் இந்தியைக் கற்றுத் தருகின்றனர். இந்த அமைப்பு 1918 - ஆம் ஆண்டு காந்திஜியால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றாண்டை நெருங்கினாலும் இந்த அமைப்பின் நோக்கம் சமீப காலமாகத்தான் சொல்லிக்கொள்ளும்படி நிறைவேறியுள்ளது. இப்போது எழ...