மு.கு: ஜெயகாந்தனின் முதலாமாண்டு நினைவாக...இக்கட்டுரை. எப்போதும் மழை இல்லை, மழை இல்லை என்றே புலம்பிய நமக்கு (எல்லோரும் புலம்பினோமா என்ன?) சென்ற ஆண்டு ‘மினி சுனாமி’ போல் சென்னை, கடலூர், தூத்துக்குடி போன்ற பகுதிகளை இயற்கை தன் பேராற்றலின் சிறு துளி கொண்டு எச்சரித்துப் போனது. மழையின் கொடூரங்களைத் தாங்க முடியவில்லை என்று எல்லோரும் தவித்தனர். உண்மையில் அது மழையின் கொடூரமா அல்லது மனிதக் கொடூரமா? விவாதம் பிறகு. சென்னையில் பயங்கர மழை. ஊரெல்லாம் வெள்ளம். அம்மாசி என்பவர் சென்னையின் சேரிப் பகுதியைச் சேர்ந்த கிழவ ர் . திருமணமாகாதவர். பாப்பாத்தி என்ற பெண் பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்து தீனன் என்ற ரிக்ஷாக்காரனுக்குத் திருமணம் செய்து வைத்தார். ஆனால், தீனன் - பாப்பாத்தியால் முதலிரவு கொண்டாட முடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். அகமொன்று. புறமொன்று. புறக்காரணம் – அன்றைய இரவு திடீரென்று சூறைக்காற்று. அதைத் தொடர்ந்து பெருமழை. சேரியின் குடிசைகள் சின்னாபின்னமாகின்றன. எல்லோரும் கிடைத்த இடங்களில் – வீடுகளில், பள்ளிகளில் தஞ்சம் புகுகின்றனர். தீனன் பாப்பாத்தியை செல்வம் என்பவனுடைய வீட்டில் விட்டு...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!