முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உள்ளவரை வாழ வைக்காத சென்னை

இந்த வலைப்பூவில் நான் இரண்டு விஷயங்களைப் பற்றி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்றிருந்தேன். ஒன்று அரசியல் (கட்சி அரசியல்).  இரண்டு சினிமா. ஆனால், இப்போது ஒரு படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று என்னையறியாமலே என்னுள் ஒரு தூண்டுதல். என்னைக் கவர்ந்த அந்தப் படம் 'மெட்ராஸ்'.  நூறில் தொன்னூற்று ஒன்பதே முக்கால் புள்ளி ஒன்பது ஒன்பது படங்கள் சென்னையில் நடைபெறுவதாகவே இருக்கிறது. அதைப் பார்க்கும் மக்கள் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்து இன்று வரை சென்னை என்றால் டாம்பீகமும் கம்பீரமும் கொண்ட மாநகரம் என்று நினைத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே முதல் முறை சென்னைக்குப் போகும் அயலூர்வாசிக்கு அதன் மீது அதீத எதிர்ப்பார்ப்பும் நிறைய நம்பிக்கையும் கொஞ்சம் பயமும் மிரட்சியும் வந்துவிடுகிறது. (முதல் முறை போனபோது எனக்கும் இவை இருந்தன). உண்மைதான். சென்னையில் இல்லாதது எதுவும் இல்லை. ஆனால், நாம் பார்க்கும் இந்த முகம் சென்னையின் ஒரு பகுதிதான். தென் சென்னையை மட்டும் காண்பிக்கும் தமிழ் சினிமாவில் முதன் முதலாக முழுக்க முழுக்க வட சென்னையைக் காட்டியிருப்பதால் தான் இந்தப் படம் எனனைக் கவர்ந்தது...