முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

2020இல் வாசிப்பும் நானும்

               இந்த ஆண்டு தொடக்கத்தின் போது 365 நூல்களை வாசிக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டேன். ஆனால் மிக மிகக் குறைவாக வாசித்த ஆண்டாக இந்த ஆண்டு இருந்தது என்பதுதான் விநோதம். மொத்தம் வெறும் 87 நூல்கள் மட்டுமே வாசித்திருக்கிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு என் வாசிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு மேதகு ஐயா கொரோனா அவர்கள்தான் காரணம். பெருந்தொற்றுக் காலம் கிடைத்தற்கரிய நேரத்தை அனைவருக்கும் வழங்கியது. நிச்சயம் முந்தைய ஆண்டுகளை விட இரண்டு மடங்கு அதிகமாக வாசித்திருக்கலாம். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் அதிகம் வாசிப்புக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. திரைப்படங்கள் அதிகம் பார்க்கத் தொடங்கியதும் முக்கியக் காரணம். பெரும்பாலும் தமிழ் நூல்களே வாசித்திருக்கிறேன் (ஆங்கிலத்தில் வாசித்த ஒன்றிரண்டு நூல்களை கணக்கில் எடுப்பதே தகாது). “வாசிப்பு மாரத்தான்” என்று எனக்கு நானே போட்டி போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு நாளொன்றுக்கு ஒரு முழு நூலை வாசிக்க முயன்றேன். அதில் பெரும்பாலும் வெற்றியும் அடைந்தேன். புனைவு நூல்களே அதிகம்; அபுனைவு நூல்கள் குறைவு தான்...