என் பள்ளி ஆசிரியர் திரு. பாவை செ. சங்கர் தான் எழுதிய "நல்லறம்" என்ற நூலை ஒரு நிகழ்வில் எனக்குப் பரிசளித்தார். நேற்று இரவு ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அது குறித்த பதிவே இது. "அறம்" என்ற சொல்லை வேறெந்த மொழியிலும் இதே பொருள் தரும்படி பெயர்க்க முடியாது. தர்மம் என்ற சொல் இதற்கு நிகரானது என்று சொல்வார்கள். என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. தமிழர்களின் வாழ்வில் அறம் எந்த அளவுக்கு இருந்தது என்பது ஒருபுறம். ஆனால், தமிழ் இலக்கியத்தில் அறம் என்பது அதிகம் பதிவு செய்யப்பட்ட அல்லது அதிகம் பேசப்பட்ட சொல். சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய இலக்கியம் வரை அறத்தைப் பேசுவதுதான் இலக்கியத்தின் நோக்கம். அறம் குறித்து சமணர்கள் தான் அதிகம் வலியுறுத்தினர். இல்லறம், துறவறம் என்று இரண்டாகப் பிரித்தனர். இதில் இல்லறம் என்பதிலேயே நல்லறம் அடங்கும் என்று சொல்லும் நூல் தான் இது. நான் முன்பு சொன்னதைப் போல் ஒன்றை மட்டும் அறம் என்று வகைப்படுத்தி விட முடியாது. பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும். அதனால், எல்லாவற்றையும் விளக்க முயலாமல் குறிப்பிட்ட ஆறு அறங்களை மட்டும் விரிவாகப் பேசுகிறத...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!