ராஜ் கௌதமனின் "கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக" - நூல் விமர்சனம் எனக்கு நினைவு தெரிந்து நான் முதன் முதலாகக் கற்றுக்கொண்ட பாடல் வள்ளலாரின் “ஒருமையுடன் நினது திருமலரடி” என்ற பாடல் தான். என்னுடைய தாத்தா வள்ளலார் வழி நடப்பவர். விவரம் புரியாத வயதிலிருந்தே வள்ளலார் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது. அவர் குறித்து நான் அதிகம் அறிந்துகொண்டதும் விவாதம் செய்ததும் என் தாத்தாவிடம் தான். தாத்தா தத்துவ நிலையில் விளக்குவார். நான் உலகியல் காரணங்களை அடுக்குவேன். வள்ளலார் பற்றிய பெரும்பாலான நூல்களை தாத்தா சேகரித்து வைத்திருக்கிறார். அப்படித்தான் மூன்றாண்டுகளுக்கு முன் ராஜ் கௌதமன் அவர்கள் எழுதிய “கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக” என்ற நூலை வாங்கி வந்தார். நான் ராஜ் கௌதமனின் “லண்டனில் சிலுவைராஜ்” என்ற நாவலை முன்பே வாசித்திருந்தேன். இந்த நூல் வள்ளலார் பற்றிய வழமையான கட்டுரை நூலாகவே இருக்கும் என்று நினைத்தே வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் இது மிக முக்கியமான ஆய்வு நூல் என்பதை வாசித்த பின்பு உணர்ந்தேன். ஒரு சிந்தனையாளனை அவனுடைய சமூகம் தான் உருவாக்குகிறது. தன்னுடைய அக அறிதல் மூலமா...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!