முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது. 


இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்).


இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன். எத்தனை நூல்கள் வாங்கினாலும் நிறைவு கொள்ளாத மனத்தை ஒன்றும் செய்ய முடியாது. அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வாங்கிக் கொள்ளலாம் என்று என் மனத்திடம் சொல்லி ஒருவாறு சமாளித்து வைத்திருக்கிறேன் (வேறு வழி?) 


வாங்கிய நூல்களின் பட்டியல்:

1. வேள்பாரி (2 பாகங்கள்) – சு. வெங்கடேசன் 

2. போரும் வாழ்வும் (3 பாகங்கள்) – லியோ டால்ஸ்டாய்

3. நெஞ்சுக்கு நீதி (6 பாகங்கள் ) – மு. கருணாநிதி

4. ஓநாய் குலச்சின்னம் – ஜியாங் ரோங்

5. தூப்புக்காரி – மலர்வதி 

6. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார் – கி. தளபதிராஜ்

7. மண்ணும் மனிதரும் – சிவராம காரந்த் 

8. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

9. JK வாதம் பிரதிவாதம் – ஜெயகாந்தன் (தொகுப்பு: ஜெ. ஜெயசிம்ஹன்)

10. மாலை மயக்கம் – ஜெயகாந்தன் 

11. உ.வே.சாமிநாதையரை ஒதுக்கலாமா? – பெருமாள் முருகன்

12. திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 – ஆ. இரா. வேங்கடாசலபதி 

13. சிலுவையின் பெயரால் – ஜெயமோகன்

14. யாதும் காடே யாவரும் மிருகம் – டி. தருமராஜ்

15. அநாகத நாதம் – செந்தில் ஜெகந்நாதன்

16. நிர்வாண நகரம் – சுஜாதா

17. மடப்புரத்து காளி – இந்திரா சௌந்தர்ராஜன் 

18. தம்மம் தந்தவன் – விலாஸ் சாரங்

19. தங்க நகைப்பாதை – மு. குலசேகரன்

20. கரமுண்டார் வூடு – தஞ்சை பிரகாஷ்

21. அன்புள்ள புல்புல் –  சுனில் கிருஷ்ணன் 

22. ஆகோள்  – கபிலன் வைரமுத்து 

23. கோமணம் – சுப்ரபாரதிமணியன்

24. மானசா – லஷ்மி பாலகிருஷ்ணன்

25. அறிவுக்கு ஆயிரம் கண்கள் – மரபின்மைந்தன் முத்தையா

26. உளிகள் நிறைந்த உலகமிது – மரபின்மைந்தன் முத்தையா

27. உமா மகேஸ்வரி கதைகள் (முழுத் தொகுப்பு) – உமா மகேஸ்வரி 

28. குதிரை மரம் – கே.ஜே. அஷோக்குமார்

29. காதுகள் – எம்.வி. வெங்கட்ராம்

30. சித்தார்த்தன் – ஹெர்மன் ஹெஸ்ஸே

31. தமிழ் பயிற்றும் முறை – டாக்டர் ந. சுப்புரெட்டியார்

32. சிந்தா நதி – லா. ச. ராமாமிர்தம்

33. அள்ள அள்ள பணம் (பாகம் 7: தங்கம்)– சோம. வள்ளியப்பன்

34. அள்ள அள்ள பணம் (பாகம் 10:  SIP) – சோம. வள்ளியப்பன்

35. சர்க்கஸ்.காம் – இரா. நடராஜன்

        - தீனதயாளன்

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...