முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதல் எழுத்து

 நண்பர்களே,  
                          வணக்கம்....
   
     வெகு நாட்களாகவே ஒரு 'Blog' தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முக நூலிலும், டிவிட்டரிலும், கூகுள் ப்ளஸிலும் நான் இருந்தாலும் வலைப்பூ என்பது என்னை எப்போதுமே ஈர்ப்பதாக இருந்தது. காரணம், மற்றவற்றை விட வலைப்பூவில் இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக செயல் பட முடியும் என்பதால் தான். அதுமட்டுமல்லாது, இன்று படித்துப் பார்க்காமலே ஒருவருடைய போஸ்ட் - க்கு 'லைக்' போடுவதும் கமென்ட் செய்வதும் இயல்பாகிப் போனதால் முக நூலில் நம்பிக்கைக் குறைந்ததும் ஒரு காரணம். நான் படித்த, கேட்ட, கோபப்பட்ட, சிந்தித்த, சிரித்த விஷயங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய எழுத்துகள் பாராட்டுக்கும் பகிர்வுக்கும் விமர்சனத்திற்கும் ஆளாக்கப்பட்டால் அதுவே என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று கருதுகிறேன். எனவே, நண்பர்களே, படியுங்கள். உங்களுடைய கருத்துகளை இடுங்கள்.

     நிச்சயம் இந்த வலைப்பூ வித்தியாசமானதாய் இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம். மே 9, 2014 இல் தொடங்கப்பட்டுள்ள இப்பூ என்றும் வாடாமல் இருக்குமென்று நம்புகிறேன். நன்றி!

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
congrats for your first step

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

அதியனும் நூல்களும்

மகன் அதியன் அருட்பொழில் பிறந்தவுடன் சில விஷயங்கள் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதிலொன்று அவனுக்காகவும் எனக்காகவும் சில புத்தகங்கள் வாங்க வேண்டும் என்பது. அந்தப் புத்தகங்கள் அவன் பிறந்த மாதத்தில் வாங்கியுள்ளதால்  அது எப்போதும் பசுமையான நினைவாக பின்னாளில் எனக்கும் அவனுக்கும் இருக்கும்.  அதியன் பிறந்த மே மாதத்தில் கீழே சொல்லியிருக்கும் ஆறு நூல்களை இணையம் மூலமாக வாங்கினேன்.  நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ள இந்தப் புத்தகங்கள் சென்னைப் புத்தகத் திருவிழாவில் கூட கிடைக்கவில்லை. அங்கே விசாரித்த போது விஷ்ணுபுரம் வலைதளத்தில் கிடைக்கும் என்றனர்.  எனவே இந்த ஆறு நூல்களையும் விஷ்ணுபுரம் வலைதளத்தில் வாங்கி இருக்கிறேன். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்: மிக அற்புதமான, நேர்த்தியான பேக்கேஜிங் (நல்ல தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை. பொதிதல், கட்டுதல் என்பதெல்லாம் இணையான சொல்லாகத் தோன்றவில்லை). சிறு பிசிறு கூட இல்லாத, எந்தவித பாதிப்பும் இல்லாத அந்நூல்களை கைகளால் பிரித்துப் பார்த்தபோது மிகுந்த மனநிறைவை அடைந்தேன். விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு இதற்காகவ...