முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2024-இல் வாசித்த புத்தகங்கள்

2024 இல் வாசித்த புத்தகங்கள் – தீனதயாளன்

 

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மிகத்தீவிர வாசிப்பில் இருந்தேன். ஒரு நாளில் 4,5 புத்தகங்கள் கூட வாசித்திருக்கிறேன். அப்போது உறவினர் ஒருவர் என் தாத்தாவிடம் சொன்னது: “இப்போது இவ்வளவு படிக்க நேரம் இருக்கும். ஆனால் வேலைக்குச் சென்றுவிட்டால் கொஞ்சமும் நேரம் இருக்காது. வாசிப்பு முற்றிலும் இல்லாமல் ஆகும்”. 

 

அவர் சொன்னபடி இதுவரை நடக்காதது குறித்து மகிழ்ச்சியே. வாசிப்பு முற்றிலும் இல்லாமல் போகவில்லை. ஆனாலும் வாசிக்கும் நூல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த ஆண்டு 63 நூல்கள் தான் வாசித்திருக்கிறேன். ஆனால் நூல்களுக்கு இணையாக 60 திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். இது முன் எப்போதையும் விட அதிகம்.

 

கடந்த எந்த ஆண்டையும் விட 2024 தொடக்கம் முதலே நிறைய குடும்பச் சிக்கல்கள். மன அலைக்கழிப்புகள். நிலை கொள்ளாத மனம். பேரிழப்பாக வந்தது தாத்தாவின் மரணம். அது ஏற்படுத்திய வெற்றிடம். அடுத்து ஒரு சிறு நன்மை நடப்பது போல் நடித்து அதுவும் இல்லாமல் போனது. மொத்தத்தில் மனம் வெறுமையை மட்டும்தான் பெரும்பாலான நாட்களில் கொண்டிருந்தது. வாசிப்புக்கு மனம் ஒத்துழைக்காததால் நிறைய திரைப்படங்கள் பார்த்தேன். சில இரவுகளில் நினைவுகளில் இருந்து தப்பிக்க ஜெயமோகனின் தளத்துக்குச் சென்று 6 மணி நேரம் வரை தொடர்ந்து கட்டுரைகளாக வாசித்துத் தீர்த்தேன். 2024 தான் எனக்கு மிக மோசமான ஆண்டு. முழுக்க முழுக்க எதிர்மறை நிகழ்வுகளால் மட்டுமே நிறைந்த ஆண்டு.

இவ்வாண்டு வாசித்த நூல்களின் பட்டியல்:

நாவல்கள்:

1.     படுகளம் – ஜெயமோகன்

2.   கங்கணம் - பெருமாள் முருகன்

3.   பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - பெருமாள் முருகன்

4.   மகாநதி – பிரபஞ்சன்

5.   கதிரேசன் செட்டியாரின் காதல் - மா. கிருஷ்ணன்

6.   ஊருக்குள் ஒரு புரட்சி - சு. சமுத்திரம்

7.   பைல்கள் - நீல. பத்மநாபன்

8.   ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி

9.   ஆஸ்டின் இல்லம் – சுஜாதா

10.  பிரியா - சுஜாதா

11.  மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ். பாலபாரதி

12.  கள்வனின் காதலி – கல்கி

13.  Once upon an IAS exam - K. Vijayakarthikeyan

14.  அந்த 69 நாட்கள் - ராஜேஷ் குமார்

15.  நிலவுக்கும் நெருப்பென்று பெயர் – ராஜேஷ்குமார்

16.  தவறுக்கும் தவறான தவறு - ராஜேஷ்குமார்

17.  First Flight to Paris - ராஜேஷ் குமார்

18.  முதல் சக்தி - இந்திரா சௌந்தர்ராஜன்

19.  இரண்டாம் சக்தி - இந்திரா சௌந்தர்ராஜன்

20.  மூன்றாம் சக்தி - இந்திரா சௌந்தர்ராஜன்

21.  நான்காம் சக்தி - இந்திரா சௌந்தர்ராஜன்

22.  ஐந்தாம் சக்தி - இந்திரா சௌந்தர்ராஜன்

23.  ஆறாம் சக்தி - இந்திரா சௌந்தர்ராஜன்

24.  ஏழாம் சக்தி - இந்திரா சௌந்தர்ராஜன்


கட்டுரை நூல்கள்:

25.  விந்தன் கட்டுரைகள் - விந்தன்

26.  வேம்ப நாட்டுக் காயல் - இரா. முருகன்

27.  நூறு நிலங்களின் மலை – ஜெயமோகன்

28.  கண்ணீரைப் பின்தொடர்தல் - ஜெயமோகன்

29.  பெண் கதை எனும் பெரும் கதை - கி. ராஜநாராயணன்

30.  எவை இழப்புகள் - அசோகமித்திரன்

31.  கறுப்புச் சட்டை - சுகி. சிவம்

32.  அ' னா ஆ’வன்னா - நா. முத்துக்குமார்

33.  குண சித்தர்கள் - க. சீ. சிவக்குமார்

34.  பாரதியும் சாதி ஒழிப்பும் - தா. பாண்டியன் 

35.  பிஸினஸ் சைக்காலஜி - சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

36.  நல்லதாக நாலு வார்த்தை - சோம. வள்ளியப்பன்

37.  தூய்மை தொடங்கும் இடம் - என். சொக்கன்

38.  வெல்லுவதோ இளமை - என். சொக்கன்

39.  எட்டும் தூரத்தில் IAS - கே. விஜயகார்த்திகேயன்

40.  பெண் + கள் + ஊர் - சி. சரவணகார்த்திகேயன்

41.  நிழல்களோடு பேசுவோம் - மனுஷ்யபுத்திரன்

42.  இங்கு பஞ்சர் போடப்படும் - அராத்து


சிறுகதைகள்:

43.  பொட்டல் கதைகள் – பொன்னீலன்

44.  தன்வியின் பிறந்தநாள் - யூமா வாசுகி

45.  மலர்த்துளி - ஜெயமோகன்

46.  உண்மையான காதல் - அராத்து


அரசியல், வரலாற்று நூல்கள்:

47.  என் பெயர் எஸ்கோபர் - பா. ராகவன்

48.  பாகிஸ்தான்: அரசியல் வரலாறு - பா. ராகவன்

49.  மொஸாட்: இஸ்ரேலிய உளவுத் துறை - என். சொக்கன்

50.  காந்தியின் நிழலில் - எஸ். ராமகிருஷ்ணன்

51.  காந்தி யார்? - என்.சொக்கன்

52.  அக்பர் - என். சொக்கன்

53.  இராஜேந்திர சோழன் - அமுதன்

54.  சாவித்திரியின் பள்ளி - பஞ்சுமிட்டாய் பிரபு

55.  தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும் - தொ. பரமசிவம்


மதம், ஆன்மிகம், அமானுஷ்யம்:

56.  இஸ்லாம் சில நிமிடங்களில் – ஹபீப் முகம்மது

57.  இந்து மதம் எங்கே போகிறது - அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார்

58.  அமானுஷ்யம் - ஜி.எஸ்.எஸ்


மனநலம்/மருத்துவ நூல்கள்:

59.  நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா? – சிவபாலன் இளங்கோவன்

60.  சுகப்பிரசவம் – டாக்டர். மகேஸ்வரி ரவி

61.  மருந்தென வேண்டாவாம் - கு. சிவராமன்


சினிமா:

62.  நகலிசைக் கலைஞன் - ஜான் சுந்தர்

63.  பாட்டுவாசி - இளம்பரிதி கல்யாண்குமார்

64.  சர்வதேச திரைப்படங்கள் (பாகம் 1) - சுரேஷ் கண்ணன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

அதியனும் நூல்களும்

மகன் அதியன் அருட்பொழில் பிறந்தவுடன் சில விஷயங்கள் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதிலொன்று அவனுக்காகவும் எனக்காகவும் சில புத்தகங்கள் வாங்க வேண்டும் என்பது. அந்தப் புத்தகங்கள் அவன் பிறந்த மாதத்தில் வாங்கியுள்ளதால்  அது எப்போதும் பசுமையான நினைவாக பின்னாளில் எனக்கும் அவனுக்கும் இருக்கும்.  அதியன் பிறந்த மே மாதத்தில் கீழே சொல்லியிருக்கும் ஆறு நூல்களை இணையம் மூலமாக வாங்கினேன்.  நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ள இந்தப் புத்தகங்கள் சென்னைப் புத்தகத் திருவிழாவில் கூட கிடைக்கவில்லை. அங்கே விசாரித்த போது விஷ்ணுபுரம் வலைதளத்தில் கிடைக்கும் என்றனர்.  எனவே இந்த ஆறு நூல்களையும் விஷ்ணுபுரம் வலைதளத்தில் வாங்கி இருக்கிறேன். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்: மிக அற்புதமான, நேர்த்தியான பேக்கேஜிங் (நல்ல தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை. பொதிதல், கட்டுதல் என்பதெல்லாம் இணையான சொல்லாகத் தோன்றவில்லை). சிறு பிசிறு கூட இல்லாத, எந்தவித பாதிப்பும் இல்லாத அந்நூல்களை கைகளால் பிரித்துப் பார்த்தபோது மிகுந்த மனநிறைவை அடைந்தேன். விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு இதற்காகவ...